தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி II) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்
திண்டுக்கல், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி II ) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி இன்று பார்வையிட்டார்.
திண்டுக்கல் வட்டத்தில் 60 தேர்வு மையங்களில் 16,950 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டியிருந்தனர். இவர்களில் 12,518 தேர்வர்கள் (73.08%) தேர்வு எழுதினார்கள். 4,432 தேர்வர்கள் (26.14%) தேர்வில் பங்கேற்கவில்லை.
கொடைக்கானல் வட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 369 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டியிருந்தனர். இவர்களில் 263 தேர்வர்கள் (71.02%) தேர்வு எழுதினார்கள். 106 தேர்வர்கள் (28.72%) தேர்வில் பங்கேற்கவில்லை.
பழனி வட்டத்தில் 21 தேர்வு மையங்களில் 5,374 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டியிருந்தனர். இவர்களில் 4,134 தேர்வர்கள் (76.09%) தேர்வு எழுதினார்கள். 1,240 தேர்வர்கள் (23.07%) தேர்வில் பங்கேற்கவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 83 தேர்வு மையங்களில் 22,693 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டியிருந்தனர். இவர்களில் 16,915 தேர்வர்கள் (75%) தேர்வு எழுதினார்கள். 5,778 தேர்வர்கள் (25%). தேர்வில் பங்கேற்கவில்லை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment