திண்டுக்கல்லில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது விழா நடைபெற்றது:
திண்டுக்கல் நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திரு.முனைவர் மு.முருகேசன் கல்விப் பணியில் சிறப்பாக பணியாற்றியமையை பாராட்டி Dr.ராதா கிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தது. அதோடு வெள்ளிப் பதக்கமும், ரூ 10,000க்கான ஊக்கத்தொகையும் வழங்கியது. அவர் பெற்ற ஊக்கத்தொகையை பள்ளியின் உட்கட்டமைப்பு வளர்ச்சிபணிக்காக பள்ளி தலைமை ஆசிரியர் திரு.மகேந்திரன் அவர்களிடம் வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment