கொடைரோடு அருகே தற்கொலை செய்து கொண்டவரின் உடல் எரிப்பு - பாதி எரிந்த நிலையில் உடலை மீட்ட போலீசார்
திண்டுக்கல் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டி சேர்ந்தவர் கார்த்திக் (34), குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டு கார்த்திக் உடல் ஜெ.ஊத்துப்பட்டி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் சுடுகாட்டில் தீயில் எரிந்து கொண்டிருந்த கார்த்திக்கின் உடலை பாதியில் எரிந்த நிலையில் மீட்டு உடற் கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கார்த்திக்கின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment