திண்டுக்கல்லில் அனுமதியின்றி இலவச மகளிர் டிக்கெட் வினியோகம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 2ல் இருந்து அரசு பஸ் கடந்த 15ம் தேதி கோபால்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களை ஏற்றிச் செல்வதற்காக புக்கிங் செய்தன.
வழக்கமாக இதுபோன்று தனியார் நிகழ்ச்சிகளுக்கு பயணிகளை புக்கிங் செய்து ஏற்றிச் செல்லும்போது போக்குவரத்துக் கழக மேலாளர் வழங்கும் அனுமதி கடிதத்தை கண்டக்டர் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால் முறையான விதிகளை பின்பற்றாத போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த ஊழியர்களான சுப்பையா, ஜோசப் மிக்சன் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment