கள்ளிமந்தயம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம்
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயம் அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் திருமலைசாமி என்பவரை வெட்டி கொலை செய்த சின்னத்துரை (எ) தங்கவேல் என்பவரை கள்ளிமந்தயம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் கள்ளிமந்தயம் காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் சின்னத்துரை (எ) தங்கவேலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment