திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்தில் 265 கிலோ தடை பொருட்கள் பறிமுதல், ரூ.21 லட்சம் அபராதம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 7 September 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்தில் 265 கிலோ தடை பொருட்கள் பறிமுதல், ரூ.21 லட்சம் அபராதம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

 


திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்தில் 265 கிலோ தடை பொருட்கள் பறிமுதல், ரூ.21 லட்சம் அபராதம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், நிலக்கோட்டை, ஆத்துார், கன்னிவாடி, பழநி,வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து மாவட்ட அலுவலர் கலைவாணி உத்தரவில் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, செல்லத்துரை, ஜாபர்சாதிக், லாரன்ஸ்,கண்ணன்,சரண்யா திடீர் சோதனை மேற்கொண்டனர்.


கடந்த ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் 36 கடைகளில் இருந்த 265 கிலோ தடை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளை சீல் வைத்ததோடு ரூ.21 லட்சம் அபராதம் விதித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad