திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவி பதாகையுடன் அலுவலகத்தில் ஆர்பாட்டம்:
திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டி ஊராட்சி, வளவி செட்டியபட்டி சேர்ந்த 17 வயசு சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த துணைத் தலைவர் சுப்பிரமணி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் சிறைக்கு சென்று வெளியே வந்தார். பின்னர் வழக்கை வாபஸ் வாங்கக்கோரி தங்களை மிரட்டுவதாக இன்று மாணவி பெற்றோருடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment