திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடி கையாடல் செய்து சிறையில் உள்ள சரவணனை 3 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி
திண்டுக்கல் மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த சரவணன் 2023 ஜூனிலிருந்து மக்கள் செலுத்திய வரிப்பணத்தை முறையாக வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்களை தயார் செய்து ரூ.4.66 கோடியை கையாடல் செய்தது தொடர்பாக மாநகராட்சி, சரவணனை சஸ்பெண்ட் செய்தது. இவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் மனு செய்தனர் இதை விசாரித்த நீதிபதி பிரியா, நேற்றிலிருந்து (ஜூலை31) ஆக.2 வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்தார். அதன்படி போலீசாரும் சரவணனை அழைத்து சென்று விசாரித்துவருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment