கொடைக்கானல் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் ஹோட்டல் உரிமையாளர் சங்கம் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் சுற்றுலா வரும் பயணிகளை ஹோட்டலில் தங்க அனுமதிக்க மாட்டோம் என ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் இ.பாஸ் முறை தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தவர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் சுற்றுலா வரும் பயணிகளுக்கு உணவு வழங்க மாட்டோம் என்றும் மேலும் இந்த விஷயத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் கொடைக்கானலில் உள்ள உணவக உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment