பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
வைகாசி மாத பவுர்ணமியில் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாக அனைத்து முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. சிறப்பு பெற்ற இத்திருவிழா பழனியில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு விழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
திருவிழாவின் 6 ஆம் நாளான 21-ந் தேதி இரவு 6 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
22-ந்தேதி வைகாசி விசாக நாளன்று மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது. 25-ந்தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment