திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருள்மிகு காளியம்மன், பகவதியம்மன், ஶ்ரீ லெட்சுமி விநாயகர் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 19 May 2024

திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருள்மிகு காளியம்மன், பகவதியம்மன், ஶ்ரீ லெட்சுமி விநாயகர் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்சொரிதல்

 


திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருள்மிகு காளியம்மன், பகவதியம்மன், ஶ்ரீ லெட்சுமி விநாயகர்  திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று  பூச்சொரிதல் 


பூச்சொரிதல் விழாவிற்கு பூவால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காளியம்மன் மற்றும் பகவதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர் . 


பூந்தேரினை  அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி  துவக்கி வைத்தார். விழாவிற்கு திண்டுக்கல் மேயர் திருமதி . இளமதி , துணை மேயர்.திரு. ராஜப்பா மற்றும் மாநகராட்சி மாமன்ற உருப்பினர்கள், அனைத்து மத தலைவர்கள் , அரசாங்க அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். மேட்டுப்பட்டி காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூந்தேர்  


திண்டுக்கல் 4 ரத வீதிகளில் வலம் வந்து மீண்டும் திருக்கோவிலை அடைந்தது . பூந்தேருக்கு முன்பு பக்தர்கள் முளைப்பாரிகள் மற்றும் பூத்தட்டுகள் ஏந்தி நகர் வலம் வந்தனர். 


விழாவை மிகவும் சிறப்பாக விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இன்று இரவு 8 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் திரைப்பட நடிகை மற்றும் பாடகி பூவிதா வழங்கும் பல்சுவை நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும் என விழாக்குழு கமிட்டியினர் அறிவித்துள்ளார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad