தொடர் பறிப்பு: ஒருவருக்கு குண்டாஸ்:
திண்டுக்கல்லில் பிரபல செயின் பறிப்பு திருடன் மீது குண்டாஸ் பாய்ந்தது.
திண்டுக்கல் நகர் பகுதியில், தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மோகன்தாஸ் மகன் சூரியவர்மா(32). என்பவரை, திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சூரிய வர்மாவின் குற்ற நடவடிக்கைகளை கொடுக்கும் பொருட்டு எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பூங்கொடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான போலீசார், சூரியவர் மாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment