வத்தலகுண்டு அருகே செவிலியருக்கு பாலியல் தொந்தரவு செய்த அரசு மருத்துவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மல்லனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் (28).இவர் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் உள்ள இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றும் சரண்யா (31) என்ற செவிலியருக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது விருப்பத்துக்கு இணங்காவிட்டால் பணியில் இருந்து விலக்கி விடுவதாகவும் சீனிவாசன் மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சரண்யா தற்கொலைக்கு முயன்று உள்ளதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சரண்யா அளித்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட வத்தலகுண்டு காவல்துறையினர் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மருத்துவர் சீனிவாசனை கைது செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment