சகோதரிகள் கூட்டு பலாத்காரம் தலைமறைவான ரவுடி ஒரு வாரத்துக்கு பின் கைது விருப்பம் இல்லாமல் ஈடுபட்டதாக வாக்குமூலம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 8 April 2024

சகோதரிகள் கூட்டு பலாத்காரம் தலைமறைவான ரவுடி ஒரு வாரத்துக்கு பின் கைது விருப்பம் இல்லாமல் ஈடுபட்டதாக வாக்குமூலம்

 


சகோதரிகள் கூட்டு பலாத்காரம் தலைமறைவான ரவுடி ஒரு வாரத்துக்கு பின் கைது விருப்பம் இல்லாமல் ஈடுபட்டதாக வாக்குமூலம்


திண்டுக்கல் அருகே 19, 17 வயதுடைய 2 சகோதரிகளை கடந்த வாரம் மோட்டார் பைக்கில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. தாமரைக்குளம் பகுதியில் சிறுமிகளின் காதலர்கள் முன்பே அவர்களை சுட்டிப் போட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர்.


2 சிறுமிகளையும் 4 பேர் கற்பழித்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு நாங்கள் அழைக்கும் போதெல்லாம் எங்கள் இடத்துக்கு வர வேண்டும். இல்லையெனில் இந்த விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் எனவும் மிரட்டினர்.


திண்டுக்கல் நகரையே பெரும் பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில்  ஈடுபட்ட சரண்குமார். வினோத்குமார், சூரிய பிரகாஷ் ஆகிய 3 பேரை செய்தனர்.


தலைமறைவான ரவுடி பிரசன்னகுமாரை பிடிக்க மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் டி.எஸ். பி. உதயகுமார் ஆலோசனையின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி,சப் இன்ஸ்பெக்டர்,  இராஜேந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில் 


பழனி பைபாஸ் பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.


பொன்மாந்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் பிரசன்ன குமார் மீது 5 கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் உள்ளன. இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்  தன் மீது பல்வேறு


வழக்குகள் இருப்பதால் தேர்தல் சமயத்தில் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும், சம்பவத்தன்று தனது நண்பர்கள் உதவி என கேட்டதால் அவர்களுக்கு தான் பதுங்கி இருக்கும் இடத்தை காட்டியதாகவும் கூறினார்.


பின்னர் நண்பர்கள் 3 பேரும் சிறுமிகளை பலாத்காரம் செய்ததை பார்த்து தனக்கும் ஆசை வந்ததால் அதில் இறங்கியதாக கூறினார். கொலை, அடிதடி வழக்குகளில் ஈடுபட்டாலும் தனக்கு பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்பதால் விருப்பம் இல்லாமல் இறங்கியதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad