திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுப்பு அளிக்க மறுக்கும் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்
பாராளுமன்றத் தேர்தல் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135(பி)யின் படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் சார்ந்த இடங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் வாக்களிப்பதற்கு வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுப்புடன் கூடிய விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் குறித்து 9789723235, 9952305662, 9894411542 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தொழிலாளர்கள் புகார் அளிக்கவும், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment