ஒட்டன்சத்திரம் அருகே காற்றாலை நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 4ஆம் நாளாக போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனம் காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்பாதை மூலம் தனியார் துணை மின் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல பாதை அமைத்தனர்.
தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின்பாதையினை மாற்றி அமைத்து விவசாயத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென 4 ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்பாதை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்தவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை அப்பியம்பட்டி கிராம விவசாயிகள் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment