பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை மற்றும் ஒளிரும் குச்சிகள் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் வழங்கல்
நத்தத்தில் தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக பழனி பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை மற்றும் ஒளிரும் குச்சி வழங்க வேண்டி நத்தம் தாலுகா தலைவர் சண்முக பிரபு, தாலுகா செயலாளர் ஜெயலானி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய பாண்டியன், தனிப்பிரிவு காவலர் சின்ன குமாரசாமி மற்றும் காவலர்கள் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டை மற்றும் ஒளிரும் குச்சிகள் வழங்கி சாலையில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய அறிவுரை கூறினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment