பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்து மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் பழநி மேற்கு கிரிவீதி, வடக்கு கிரிவீதி, அய்யம்புள்ளி ரோடு சந்திக்கும் இடத்தில் முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான 1,245 சதுரடி நிலம் 50 ஆண்டுகளுக்கு மேலாக தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இந்த சொத்துக்கள் உச்சநீதிமன்ற உத்தரவின் படியும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் தீர்ப்பின் படியும், ஆக்கிரமிப்பு காரர்களை வெளியேற்றி மீட்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment