ஒட்டன்சத்திரம் அருகே தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த கொசவபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன்(52). இவர் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் முருகன் மீது ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் முருகனை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செந்தில் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment