கொடைக்கானலில் கஞ்சா போதை காளான் விற்பனை வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் பெங்களூருவில் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மாதம் 29ஆம் தேதி கஞ்சா போதை காளான் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஹெலன் என்பவர் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் ஹெலன் பெங்களூரில் தங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் பெங்களூரு சென்று ஹெலனை கைது செய்து கொடைக்கானல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment