திண்டுக்கல்லில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தகவல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 6 December 2023

திண்டுக்கல்லில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தகவல்


திண்டுக்கல்லில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது  திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தகவல்



முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்.மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.




இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென தமிழ்நாடு அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற குழு மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு மு.அப்பாவு அவர்கள் தலைமையில் மாண்புமிகு சட்டமன்ற பேரவைத் துணைத்தலைவர் அரசு கொறடா, சட்டமன்ற பேரவை முன்னாள் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளில் (ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்ற வகையில் ) "நுாற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை



ஈர்த்தது" என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கினை நடத்துவதென குழு தீர்மானித்துள்ளது. அந்த அடிப்படையில், இதற்கென 4 துணைக் குழுக்களும், மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளன.



சட்டமன்றப் பேரவையின் முன்னாள் தலைவர் மாண்புமிகு திரு .இரா.ஆவுடையப்பன் மற்றும் சட்மன்றப் பேரவை முன்னாள் செயலாளர் திரு மா.செல்வராஜ் ஆகியோர் உள்ளடங்கிய துணைக் குழுவானது. சட்டமன்ற பேரவை உயர் அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 கல்லூரிகள் மற்றும் 1 பள்ளியில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் கருத்தரங்கினை 08.12.2023(வெள்ளிக்கிழமை) அன்று நடத்துவதென முடிவெடுத்துள்ளது.



அதன்படி, இக்கருத்தரங்கு 08.12.2023 அன்று காலை 10.30 மணியளவில் பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியிலும், பிற்பகல் 12.15 மணியளவில் ஒட்டன்சத்திரம் வட்டம், லக்கையன்கோட்டை அக்ஷயா சி.பி.எஸ்.இ. பள்ளியிலும், மாலை 3.30 மணியளவில் திண்டுக்கல் என்.எஸ்.நகர். ஜி.டி.என். கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.




இக்கருத்தரங்கிளல், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் . உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுஅலுவலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad