திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது 2050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல் பகுதியில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி. விஜயகார்த்திக்ராஜ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி.ஜெகதீசன் மேற்பார்வையில், ஆய்வாளர் கீதா, சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் பழனி ரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முத்தனம்பட்டி அருகே குட்டத்துபட்டியில் மாரிமுத்து என்பவர் தனது வீட்டில் 2,050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி கள்ளசந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் மாரிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்து 2,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment