திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா
மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணைகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி வழங்கினார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இன்று(04.11.2023) நடைபெற்ற மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பணிவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி. இ.ஆ.ப., அவர்கள், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன். வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சௌடீஸ்வரி கோவிந்தன், வேடசந்துார் பேரூராட்சி தலைவர் திருமதி கா.மேகலா கார்த்திகேயன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி சு.காமேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி தமிழ்செல்வி ராமச்சந்திரன் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment