திண்டுக்கல் மாவட்டம்: வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம்:
100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளருக்கு 100 நாட்கள் வேலை வழங்க கோரியும், 15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்க கோரியும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை தினக்கூலியாக ரூபாய் 600 வழங்க கோரி, 100 நாள் வேலை திட்ட தொழிலாளருக்கு மூன்று மாதங்களுக்கு மேல் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment