வேடசந்தூர் அருகே கோயிலை இடிக்க வந்த வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகை பதட்டம் நிலவுகிறது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 18 November 2023

வேடசந்தூர் அருகே கோயிலை இடிக்க வந்த வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகை பதட்டம் நிலவுகிறது

 


வேடசந்தூர் அருகே கோயிலை இடிக்க வந்த வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகை பதட்டம் நிலவுகிறது



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியில் நீதிமன்ற உத்தரவின்படி  கருப்பண்ணசாமி, பாப்பாத்திஅம்மாள், அங்காளபரமேஸ்வரி கோயிலை இடிக்க வந்த வருவாய்த்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.



சம்பவ இடத்தில் ஏடிஎஸ்பி.சந்திரன், டிஎஸ்பி.துர்காதேவி ஆகியோர் தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் ஜேசிபி உள்ளிட்டவைகளை முற்றுகையிட்டுள்ளதால் போலீசார் தடுப்புகள் வைத்துள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.



இந்நிலையில் வேடசந்தூர் அருகே கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடக்கிறது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad