திண்டுக்கல் மாவட்டத்தில் 68 இடங்களில் பட்டாசு கடை அமைக்க அனுமதி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் :
திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு வியாபாரிகள் அனுமதி கோரி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் கடந்த செ.மாதம் முதலில் இருந்தே விண்ணப்பித்து இருந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு துறையினரை தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கு விண்ணப்பித்திருந்த கடை உரிமையாளர்களின் இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள ஆணையிட்டனர். இதனால் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பித்த வர்களின் கடையில் நேரில் சென்று போதுமான இடவசதி பாதுகாப்பு வசதி உள்ளனவா என தீயணைப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு சான்றுகள் வழங்கினர் மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் ஆய்வின் அறிக்கையை தீயணைப்பு துறையினர் சமர்ப்பித்து உள்ளனர் இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 68 இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment