ஆத்தூர்: செம்பட்டி ஆட்டு சந்தையில் 1 கோடியே50 லட்சம் வர்த்தகம் :
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்ட செம்பட்டி ஆட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடப்பது வழக்கம் அதேபோல் இன்று நவ.10 செம்பட்டி ஆட்டு சந்தை காலை 7 மணிக்கு தொடங்கியது வரும் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் இருந்தே விவசாயிகள் வியாபாரிகள் இந்த சந்தைக்கு குவிந்தனர் திண்டுக்கல். வத்தலகுண்டு. கன்னிவாடி. ஒட்டன்சத்திரம். நிலக்கோட்டை. அய்யம்பாளையம். செம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து விவசாயிகள்.ஆடு வளர்ப்போர் வியாபாரிகள் வந்து கூடினர். 10 கிலோ கொண்ட ஒரு ஆட்டுக்குட்டியின் விலை 7000 முதல் 8000 ரூபாய் வரை விலைக்கு போனது சந்தையில் ஆட்டின் விலை அதிகரித்தாலும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். மேலும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் இன்று ஒரே நாளில் 1கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment