அய்யலூர் அருகே விவசாயி கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது ஆசை வார்த்தை கூறி மோசடியாக அழைத்துச் சென்று பணம்,நகைக்காக நண்பனை கொலை செய்த அவலம்
திண்டுக்கல்லை அடுத்த அய்யலூர் அருகே அ.கோம்பை காட்டு பகுதியில் மாமரத்துபட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக வடமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி.துர்காதேவி தலைமையிலான தனிப்படையினர் மற்றும் வடமதுரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விவசாயி முருகேஷ் இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழிலும் செய்ததாகவும் அவரிடம் பணம் புழங்குவதாக அறிந்த அவரது நண்பர்கள் அய்யலூர் கிணத்துப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அய்யலூர் தபால்புள்ளி பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனம் விற்பனைக்காக உள்ளது என்று ஆசை வார்த்தை கூறி மோசடியாக அழைத்து சென்று காட்டுப்பகுதியில் மது அருந்தலாம் என்று கூறி மது அருந்தும் பொழுது கல்லால் அடித்து கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த செயினை திருடி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இதனை அடுத்து வடமதுரை காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment