பழனி முருகன் கோவிலில் இன்று சூரசம்காரம் நாளை திருக்கல்யாணம் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி இன்று சூரசம்ஹாரமும் நாளை ஞாயிற்றுக்கிழமை சுவாமி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
இன்று மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். நான்கு கிரிவீதிகளிலும் நான்கு சூரர்கள் வதம் செய்யப்படுவது இதன் தனி சிறப்பாகும்.
நாளை ஞாயிற்றுக்கிழமை மலைக்கோவிலில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும். இந்நிலையில் பழனி கோயிலுக்கு இன்று 12 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலில் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி மற்றும் பழனி கோயில் மலையடிவாரத்தில் மாலை 6 மணிக்கு மேல் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பழனி மலைக்கோயிலில் உச்சிகால பூஜைக்கு பிறகு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment