ஒட்டன்சத்திரம் இடையகோட்டை முகைதீன் ஆண்டவர் சந்தனக்கூடு உரூஸ் ஊர்வலம் நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை யில் மிகவும் பிரபலமான முகைதீன் ஆண்டவர் தர்கா உள்ளது கடந்த 14ஆம் தேதி சந்தனக்கூடு உரூஸ் கொடியேற்றும் விழா தொடங்கியது கடந்த 24ம் தேதி மாலை வாசனை பூமாலை ஊர்வலம் நடைபெற்று முடிந்தது. இன்று அதிகாலை சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவில் தொடங்கி முக்கிய தெருக்களின் வீதியில் சென்று மீண்டும் தர்காவை வந்தடைந்தது இவ்விழாவில் சென்னை கோயம்புத்தூர் திருச்சி கரூர் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் ஏராளமானோர் முகைதீன் ஆண்டவர் சந்தனக்கூடு உரூஸ்யில் பங்கேற்றுக் கொண்டனர் மேலும் இடையக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி பாதுகாப்பு வழங்கினார் பரம்பரை முத்தவல்லி சையது மீரான் தலைமை தாங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...



No comments:
Post a Comment