வேடசந்தூர் கோம்பை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கிணற்றில் சடலமாக மீட்பு :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு Aகோம்பை பட்டியில் கிணற்றில் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் எரியோடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஏ கோம்பை பட்டியைச் சேர்ந்த சின்னமுத்து 23 என்பது தெரியவந்தது இவர் கடந்த சில மாதங்களாக கை கால் செயலிழந்த நிலையில் தனது பெற்றோருடன் வசித்து வந்தது தெரிய வந்தது இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றின் அருகே செடியில் உள்ள சுண்டைக்காய் பரிப்பதற்காக சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது மேலும் இச்சம்பவம் குறித்து வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment