திண்டுக்கல்:வேடசந்தூர் அஞ்சலி ஹோட்டல் முன்பாக கார் மோதிய விபத்தில் விவசாயி பலி:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட விருதலை பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து கவுண்டர் வயது70 இவர் தனது பைக்கில் ஆர்த்தி ஹோட்டல் முன்பாக கரூர் to திண்டுக்கல் நான்கு வழி சாலையை கடக்கும் போது எதிரே வந்த பெங்களூரைச் சேர்ந்த மார்ட்டின் நகரைச் சேர்ந்த மாலிஸ் வயது45 என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் நாச்சிமுத்து கவுண்டர் தூக்கி வீசப்பட்டார் தூக்கி வீசப்பட்டதில் அவரது இடது தலை பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு அவரது இரண்டு கால் எலும்புகளும் முறிந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நாச்சிமுத்து கவுண்டர் பலியானார் இதுகுறித்து கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல்ஆத்தூர் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment