திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக வேலை பார்த்து வந்தவர் மரணம்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையூர் நால்ரோடு அருகே பாலத்தின் கீழ் மர்மமான முறையில் ஒரு ஆண் இறந்து கிடந்துள்ளார் இதுகுறித்து திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டியன் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் பிறகு விசாரணையில் இறந்து கிடந்த நபர் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த அல்லி முத்து வயது 38 என்பதும் இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக டிரைவர் ஆக பணியாற்றியதும் தெரிய வந்தது பாலத்தின் மேலிருந்து விழுந்ததால் தலையில் அடிபட்டு இறந்துள்ளதாகவும் இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் இது குறித்து வேடசந்தூர் காவல் நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment