பழனியில் தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 23 October 2023

பழனியில் தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பழனியில் தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததுதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த மாதம் பழனி-கொடைக்கானல் சாலை பகுதியில் மருத்துவர் நகரை சேர்ந்த முத்தையா(45) என்பவர் நடந்து  சென்றபோது ஒரு கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டிச்சாமி(46), தீபக்குமார் (24),  முனிச்செல்வம் (30), பாண்டித்துரை (25) விஜய்(26), சபரிநாதன்(25) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி  ஆறு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, பழனி போலீசார் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad