திண்டுக்கல்லில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் வைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சகோதரர்களின் பேனர்
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு அந்த பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய பிரமுகர்கள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் இந்து சொந்தங்களை வரவேற்று பேனர் வைத்துள்ளனர்.மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஏற்பாட்டை செய்திருப்பது அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment