தேசிய நான்கு வழிச்சாலையில் அய்யனார் நகர் மேம்பாலத்தில் வாகனம் மோதி இரண்டு வயது பெண்மயில் உயிரிழப்பு
02/07/2023 மதியம் 2 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு அய்யனார் நகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண்மையில் உயிரிழந்தது. அவ்வழியாக சென்ற தம்மனம்பட்டியை சேர்ந்த ஜெயராம் என்பவர் இறந்த மயிலை மீட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனவர் கார்த்திகேயன் இறந்த மயிலை பெற்று சேனன்கோட்டை அருகே உள்ள மாட்டாஸ்பத்திரியில் உடற்கூறு ஆய்வு செய்து கருமலை பகுதியில் புதைப்பதற்காக கொண்டு சென்றார்.
No comments:
Post a Comment