தாடிக்கொம்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது- தாடிக்கொம்பு போலீசார் நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாடிக்கொம்பு அருகே உப்பாத்து ஓடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நல்லதம்பி, முத்துப்பாண்டி, உதயகுமார், தனுஷ்கோடி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment