கிணற்றில் தவறி விழுந்த வரை மீட்ட ஆத்தூர் தீயணைப்புத் துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தர்மத்துப்பட்டி அருகே மயிலாடும்பாறை கிராமத்தில் ராசப்பன் என்பவரது தோட்டத்தில் 100 அடி ஆழக்கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் 38 என்பவர் கால் இடறி அந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.விழுந்த வேகத்தில் சரவணனுக்கு தலை கை கால் எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது வலி தாங்க முடியாமல் கிணற்றுக்குள் இருந்த சரவணன் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வந்து சரவணனை காப்பாற்ற முயற்சி செய்தனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் விரைந்து வந்த தீனைப்புத் துறையினர் ஜூன் 7 மாலை 4 மணி அளவில் கிணற்றுக்குள் போராடிக் கொண்டிருந்த சரவணனை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment