திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் பாராட்டு.
திண்டுக்கல் பழனி ரோடு பெட்ரோல் பங்க் அருகே முன்விரோதம் காரணமாக அழகுபாண்டி(30) என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை சில மணி நேரத்திலேயே கைது செய்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான தனிப்படையினர்,
எரியோடு அருகே கோவிலூர் இபி அலுவலகம் அருகே பூபதி என்பவரிடம் செல்போன் மற்றும் பணம் கொள்ளை அடித்து சென்ற வழக்கில் துரிதமாக செயல்பட்டு கைது செய்த எரியோடு சார்பு ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான தனிப்படையினர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் அழைத்து பண வெகுமதி அளித்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment