போலியான டிரைவிங் லைசென்ஸ், புகைப்படம், முகவரி ஆகியவற்றை கொடுத்து 39 சிம் கார்டுகளை ஆக்டிவேஷன் செய்து முறைகேடுகளில் ஈடுபட்ட வாலிபர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டி சண்முகம்பாறை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ரமேஷ்(29) இவர் POS ஏஜென்ட், இவர் போலியான டிரைவிங் லைசென்ஸ், புகைப்படம், முகவரி சான்று ஆகியவற்றை பயன்படுத்தி 39 சிம் கார்டுகளை விற்பனை செய்து அதனை ஆக்டிவேஷன் செய்து முறைகேட்டில் ஈடுபட்டார்.இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில், திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment