கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து திண்டுக்கல்லில் காங்கிரஸார் வெடி வெடித்து கொண்டாடினர்.
நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று மே-13ம் தேதி காலை முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பேருந்து நிலைய பகுதியில் இருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் வெடி வெடித்தும், மேலும் திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அப்பகுதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது சித்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, மச்சக்காளை, அம்சவல்லி, திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி,
மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, விவசாய அணி மாவட்ட தலைவர் மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மாணவர் காங்கிரஸ் தலைவர் அமீர் அம்ஜா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment