திண்டுக்கல் ரயில் நிலைய நடைமேடைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற 2 பேரை ரயில்வே காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலைய நடைமேடைகளில் ஆதரவற்ற நிலையில் யாசகம் வாங்கி சுற்றித்திரிந்த ராஜபாளையம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த கந்தசாமி நாயுடு மகன் சங்கர் வயது-49 மற்றும் விழுப்புரம், சின்ன குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கவுண்டர் மகன் வெற்றிவேல் ஆகிய 2 பேரை ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி, சார்பு ஆய்வாளர் பொன்னுச்சாமி, தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் மற்றும் காவலர்கள் இருவரையும் ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களுக்கு உணவு மற்றும் உடை வழங்கினர். பின்னர் திண்டுக்கல் பாரதிபுரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நகர்ப்புற வீடற்ற ஏழைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment