செந்துறையில் போலி டாக்டர் கைது.
திண்டுக்கல், நத்தம் சட்டமன்றத் தொகுதி, செந்துறை பகுதியில் போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது . இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பூமிநாதன் தலைமையில், காசநோய் துணை இயக்குநர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் செந்துறை பகுதியில் உள்ள மெடிக்கல் அருகே உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செந்துறையில் சுபாஷ் என்பவர் 10 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் செய்வது விசாரணையில் தெரியவந்தது . இதைதொடர்ந்து அவரை கைது செய்த நத்தம் போலீசார் அவர் வைத்திருந்த ஊசி, மாத்திரை, மருந்துகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment