மினி சரக்கு வாகனம் மோதி, நடந்து சென்ற கூலித்தொழிலாளி பலி
திண்டுக்கல் அடுத்த எரியோடு அருகே தொட்டணம்பட்டி சேர்ந்தவர் பழனிச்சாமி (58), கூலித்தொழிலாளி. இன்று காலை தொட்டணம்பட்டி சுடுகாடு நடந்து சென்று கொண்டிருந்தார். அபபோது அந்த வழியாக பால் கேன் ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம் இவர் மீது வேகமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த இவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment