திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில், மாநகர் நல அலுவலர்(பொறுப்பு) செபாஸ்டின், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, சுரேஷ், தங்கவேலு மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திண்டுக்கல் மெயின் ரோடு மொச்சைகொட்ட விநாயகர் கோவில் அருகே தனியார் எசன்ஸ் கடையில் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக், முடிச்சு பைகள், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மல் பிளேட் உள்ளிட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர் தண்டபாணிக்கு ரூபாய். 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment