நத்தத்தில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 27 March 2023

நத்தத்தில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-வெட்டுகாரத்தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்நாள் அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து  பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு மண்டப சாந்தி, கோ பூஜை, மஹா பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்தது. 

பின்னர் மேளதாளம் முழங்க  யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. 


அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கலசத்தில் ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், திமுக மாவட்ட பொருளாளர் விஜயன், பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, முன்னாள் தலைவர் சிவலிங்கம், பிரேமா விஜயன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உமாமகேஸ்வரி ராஜாராம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


விழா ஏற்பாடுகளை வெட்டுக்காரத்தெரு, செட்டியார்குளத்தெரு ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad