தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு
திண்டுக்கல் தாடிக்கொம்புவில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் லட்சதீப வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
6 மணிக்கு மூலவர் சன்னதியில் இருந்து திருக்கோடி தீப புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சவுந்தரராஜ பெருமாள், திருக்கோடி தீபத்துடன் கோவிலின் பிரகார வலம் வந்தார். இதைத் தொடர்ந்து பெருமாளின் சங்கு, சக்கரம் உள்பட பல் வேறு வடிவங்களில் கார்த்திகை தீப சட்டிகளை, தன்னார்வ திருத்தொண்டர்கள் அடுக்கினர். கோவில் மணி ஒலித்தவுடன், பொதுமக்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த கார்த்திகை சட்டிகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றினர். ஒரே நேரத்தில் ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட கார்த்திகை தீப விளக்குகள் ஏற்றப்பட்ட தால் கோவில் வளாகமே தீப விளக்குகளின் ஒளியில் ஜொலித்தது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment