தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் சந்திப்பு கூட்டம்:
திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஊழியர் சந்திப்பு, கையெழுத்து இயக்க கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 6750, ஈமகிரிகை சடங்கு நிதி ரூ.25000, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களை காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி. கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment