திண்டுக்கல் மாவட்டத்தில் உன்னிக்காய்ச்சலால் இருவர் இறந்தநிலையில் மேலும் ஒருவருக்கு உன்னிகாய்ச்சல் உறுதி:
திண்டுக்கல், குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த பழனிசாமி(61) உன்னிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த டிச.10-ல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒருவரும் இறந்தார்.
இந்நிலையில் தோட்டனுாத்து பகுதியை சேர்ந்த சத்தியமேரி(47), என்பவர் 3 நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உன்னிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக சந்தேகமடைந்த டாக்டர்கள் ரத்த மாதிரியை சோதனை செய்தனர். முடிவுகள் வெளியானதில் உன்னிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப் படுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment