சின்னாளப்பட்டி அருகே அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பிக்கு ஆயுள் தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அம்பாத்துரை பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு முனியாண்டி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் அவரது தம்பி சந்தோஷ்குமார்(22) என்பவரை அம்பாத்துரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் அம்பாத்துரை போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள், சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment